புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு போகாவத்தை தோட்டத்தில் 105 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதியன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மாகாண சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் இளைஞர் அணி தலைவர் சிவனேசனும் பிரதேச சபை உறுப்பினர் லச்சுமணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப அமைப்பாளர் விஜயவீரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களுடன் இணைந்து இந்நிகழ்விற்கான பணிகளை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதி மக்களுடனும் தோட்ட முகாமையாளருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்