புகைபொருட்களின் வரி அதிகரிப்பு

377 0

cigபுகைப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

புகைப்பொருட்களுக்கான வரியை 15 சத வீதமாக அதிகரிப்பதற்கும் அதன் உற்பத்தி வரியை 5 சதவீதமாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய சிகரட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பதுடன் 15 சதவீத மேலதிக வரியும் அறவிடப்படவுள்ளது.

இது தொடர்பான யோசனைக்கே அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, ஒரு சிகரட்டின் புதிய விலை 50 ரூபா வரை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இரண்டாயிரம் ரூபாவாகவுள்ள பீடி இலை இறக்குமதி தீர்வை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பிற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.