காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயது குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவித்தது வெங்கடேசன், காளியம்மாள் என்ற நாடாேடி இனத் தம்பதி. 100 நாள்களைக் கடந்த நிலையில், குழந்தை கிடைக்காமல் அல்லாடிவந்தனர். ‘குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டாேம்” என்றபடி அங்கேயே இருந்தனர். காஞ்சிபுரம் காவல்துறை, மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தது. இந்நிலையில், ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் காளியம்மாள், சரியாகச் சாப்பிடாமலும் மனஉளைச்சலில் இருந்ததாலும், சீரியஸான நிலைக்குப் பாேய் சிகிச்சையளிக்கப்பட்டார்.
இதைப் பற்றிய செய்திகளை அறிந்த நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தியிருக்கிறார். தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி பாேல ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், சிறுமி ஹரிணி மீட்கப்பட்டுள்ளார். லதா ரஜினிகாந்த் பார்த்தாகக் கூறிய நிலையில், திருப்போரூரில் சிறுமி ஹரிணி இன்று மீட்கப்பட்டுள்ளார். ஹரிணியை போலீஸார் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர்.