42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்தடவையாக கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்றைய தினம் ஆரம்பமாகிய தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது..
இவ் ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இலங்கையின் முன்னாள் தடகள வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க உட்பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டர்.
மேலும் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
ஒலிம்பிக் தீபத்தினை இலங்கையின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான சூசைப்பிள்ளை அந்தனிப்பிள்ளை க்ளிபர்ட்டுக்கும் வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோமசேகரம் டி சில்வாவும் ஏற்றி வைத்தனர்.
தேசிய விளையாட்டு விழாவானது இந்த வருடம் முதல் முறையாக வடமாகாணத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிறைவு விழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.