இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளை தண்டிக்கும் செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இரண்டு விதமான பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
ஒன்று காவற்துறை பயங்கவராதம் மற்றையது நீதிமன்றமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதம்.
இந்த இரண்டு பயங்கரவாத செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களம் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகமாக மாறியுள்ளதாகவும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.