இலங்கை சிறைகளில் 82 பாகிஸ்தானிய பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய பிரதமரது வெளிவிவகார ஆலோசகர் சர்தாஜ் அசீஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
களவு, குடிவரவு சட்டத்தை மீறியமை, தாக்குதல்கள் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க அல்லது, சிறை மாற்றுவதற்கான சட்ட ரீதியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.