வடக்கில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் நிலை

358 0

img_0014-e1395744977879-1200x550இலங்கையின் வடக்கு பகுதியில் தொழிலாளர்கள் தொழில் வழங்குனர்களால் ஏமாற்றப்படும் நிலை அதிகமாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

வடக்கில் உள்ள 85 சதவீதமான தொழிலாளர்களுக்கு குறைந்தளவு வேதனங்களே வழங்கப்படுகின்றன.

10 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவாகவே இந்தத்தொகை அமைந்துள்ளது.

அதேநேரம் இதில், 3ல் 2பங்கு பணியாளர்களுக்கு, ஊழியர் சேமலாபநிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவை வழங்கப்படுவதில்லை.

அத்துடன் தொழிலாளர்களில் பலர், தங்களுக்குரிய தொழில் குறித்த சட்டங்களை அறியாதவர்களாகவே உள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சட்டத்துக்கு புறம்பாக 81 சதவீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள், 5 நாட்களுக்கும் அதிகமாக பணிசெய்யக்கோரப்படுவதாகவும் அந்த ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.