மஹிந்த – ரணில் இருவரும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் – அனுரகுமார

255 0

அன்று  ஜனநாயகம்  பற்றி பேசிய  பிரதமர்  ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனே அரசியலமைப்பிற்கு முரணாக  செயற்பட  ஆரம்பித்து விட்டார் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,  ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சுகளை பகிர்ந்துக் கொள்ளும் பொழுது சிறுபிள்ளை தனமாக முரண்பட்டுக் கொள்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.  

கொழும்பில் இன்று  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  கலந்து  கொண்டு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கம்  ஒன்று காணப்படாத பட்சத்தில் அமைச்சரவையின்  அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று  அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால்  பிரதமர் ரணில்  விக்ரமசிங்க இத்திருத்தத்தை  மறந்து விட்டார். அமைச்சரவையின் எண்ணிக்கையினை 36 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதிக்கு   அமைச்சர்களின் பெயர்பட்டியலை  அனுப்பி வைத்தார். ஜனாதிபதி  அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவார் என்று பிரதமர் அறிவார். ஆனால் தனது விடயத்தில்  தனக்கு எதிராக செயற்படுவதற்கு  அரசியலமைப்பை மீறமாட்டார் என்பதை  மறந்து விட்டார். 

இன்று  நாட்டில்  அனைத்து துறைகளிலும்  ஊழல் மோசடிகளே முதனிலை வகிக்கின்றது. ஊழலுக்கு  எதிராக ஊழல்வாதிகளால்  செயற்பட முடியாது என்பதற்கு  எடுத்துக்காட்டாக இரண்டு  அரசாங்கத்தின்  தலைவர்களும்  காணப்படுகின்றார்கள்.  மஹிந்த ராஜபக்ஷ  மற்றும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்நாட்டை இனி  முறையாக ஊழலற்ற முறையில் நிர்வகிக்க முடியாது. என்பதை அவர்களே பல விடயங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மக்களின் அடிப்படை  வாழ்வு இன்று மிகவும் அடிமட்டத்திலே காணப்படுகின்றது. பொருளாதார  பின்னடைவினாலும், முறையற்ற  அரசாங்கத்தின் நிர்வாகத்தினாலும் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். 

Leave a comment