அயர்லாந்தில் மலை உச்சி
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் அங்குள்ள கவுண்டி கிளேர் என்ற இடத்தில் அமைந்த மொஹெர் என்ற மலை பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்த புகழ் பெற்ற சுற்றுலா தலத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் இயற்கை அழகை ரசித்தபடியும், சிலர் மலை பகுதியில் நடந்து சென்று கொண்டும் இருந்தனர்.
யில் செல்பி எடுத்த இந்திய மாணவர் தவறி கடலில் விழுந்து பலியானார்.
இந்த நிலையில், இந்திய மாணவர் தனது மொபைல் போனில் மலை உச்சியில் நின்றபடி செல்பி எடுக்க முயற்சித்து உள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து தவறி கீழே கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அருகே இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
உடனடியாக தகவல் அறிந்து ஹெலிகாப்டரில் வந்த மீட்பு பணியாளர் ஒருவர் கடலில் மூழ்கிய மாணவரை மீட்டார். அங்கிருந்து அருகிலுள்ள டூலின் நகருக்கு சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என முறைப்படி தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அயர்லாந்து போலீசார் சுற்றுலா சென்றவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் செல்பி எடுத்தபொழுது தவறி விழுந்து மாணவர் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு, இந்த மலை உச்சியில் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர் தவறி விழுந்து பலியானார்.