யாழில் தனியார் காணிகளில் உள்ள மரங்களை களவாடும் அரச மரக்கூட்டுத்தாபனத்தினர்

320 0

high-way-treesயாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை உரிமையாளருக்கே தெரியாமல் திருட்டுத் தனமாக வெட்டிய அரச மரக் கூட்டுத்தாபனத்தினர் அதனை அங்கிருந்து ஏற்றியும் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக காணி உரிமையாளரினால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- தெல்லிப்பளை பகுதியில் உள்ள காணி ஒன்றில் புளிய மரம் ஒன்று நின்றுள்ளனர். குறித்த காணிக்கு அருகில் கை ஒழுங்கை ஒன்றும் உள்ளது.
எனவே குறித்த புளியமரம் கை ஒழுங்கையால் பயணிப்பவர்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, அதனை அங்கிருந்து அகற்றித் தருமாறு அப்பகுதி கிராம சேவகர் ஊடாக யாழ்.அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிம் தொடர்பாக பரிசீலணை செய்த மாவட்ட அரச அதிபர் இவ்விடயம் தொடர்பாக சம்பவ இடத்தில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் அரச மரக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இருப்பினும் குறித்த மரத்தினை வெட்டி அகற்றுமாறு அரச அதிபர் எந்த அறிவித்தல்களையும் அரச மரக் கூட்டுத்தாபனத்தினருக்கு வழங்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதி கிராம சேவகருடைய அனுமதியினை கூட பெற்றுக் கொள்ளாமல், காணி உரிமையாளரும் இல்லாத சமயம் பார்த்து அங்கு சென்ற அரச கூட்டுத்தாபனத்தினர் குறித்த புளிய மரத்தினை இன்று வெட்டி அங்கிருந்து ஏற்றிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக காணி உரிமையாளர் இன்று மாலை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மரக்கூட்டுத்தாபனத்தினருக்கு எதிராக பதிவு செய்துள்ளார்.