ஒரே மாதிரியான வலி நிவாரணிகள் – இருதய கோளாறை உண்டாக்கும்

363 0

5-nov-13-1050x699ஒரே மாதிரியான வலி நிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்வதானது, இருதய கோளாறுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

77 சராசரி வயதுடைய சுமார் 10 மில்லியன் பேரின் மத்தியில் இந்த ஆய்வினை பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் நடத்தியுள்ளனர்.

அவர்களில் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் முற்காலத்தில் பல்வேறு வலி நிவாரணிகளை பயன்படுத்தியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவ்வாறான வலி நிவாரணிகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 19 சதவீதத்தால் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.