புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் இனவாத கருத்துக்களை குறிப்பிடுவதையும், ஒருவருக்கொருவர் தூற்றி கொள்வதையும் தவிர்த்து விட்டு நாட்டுக்கு நலன் பயக்கும் ஒரு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை ஒன்றினைத்து பிரச்சினைகள் ஏற்படுத்தா வண்ணம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சமஷ்டி ஆட்சியின் தன்மைகள் அரசியலமைப்பு தயார்படுத்தலில் காணப்படுமாயின் அதனை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். அப்போதே ஆதரவு வழங்க முடியும்.