நாம் எமது அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்காலத்தில் அறிவிப்போம். அதே நேரம் நாம் சகல கட்சிகளுக்கும் எமது ஆதரவைத் தெரிவிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வருட இறுதியில் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் காரணமாக தோட்டக் கம்பணி அதிகாரிகள் விடுமுறையில் இருந்தனர். இதன் காரணமாக பேச்சுவார்த்ததைகள் நடத்துவதில் தடைகள் எற்பட்டன. இருப்பினும் எதிர்வரும் 8 ஆம் திகதி இது பற்றி நாம் பேசவுள்ளோம்.
சம்பள உயர்வு பற்றிப் பேசும் அதே வேளை குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கென்று எமது ஆதரவை தெரிவிப்பதில்லை என்றார். மகிந்த ராஜபக்ஷவையா? அல்லது தற்போதைய ஜனாதிபதியையா? ஆதரிப்பீர்கள் என ஊடக வியலானர் ஒருவர் கேட்ட போது எல்லோருக்கும் ஆதரவு தெரிவிப்போம் அதே நேரம் சம்பளப்பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றும் கூறினார்.