பொகவந்தலாவ, கொட்டியாகலை மத்தியபிரிவு தோட்டத்தில் 07ம் இலக்க தேயிலை மலைக்கு அருகில் உள்ள சதுப்புநில பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 7 பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (05) இரவு 11.30 மணி அளவில் சந்தேன நபர்கள் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட 7 பேரும் பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்ட 7 சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.