நாட்டின் தற்போதைய அரசாங்கம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பபடுவதை புறந்தள்ளி விட்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சகவாழ்வுக்கு பதிலாக ஈழம் உருவாகும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தவே தொடர்ந்தும் செயற்பட்டு வந்தார்.தெற்கை விட வடக்கில் அவர் அபிவிருத்திகளை மேற்கொண்டார். எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் மூலம் சாதனை படைக்க முயற்சிக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.