தமது கட்சியின் பலத்தை அறியாத நிலையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு தடையல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது கட்சியில் தவறிய இடங்களை இனங்கண்டு அவற்றை சரிசெய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.