கத்திக்குத்திற்கு இலக்கான இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பம் வெல்லவாயவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெல்லவாய – ஊவ – தெலுல்ல கிராமத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கத்திக்குத்திற்கு இலக்கான இருவரும் தனமல்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அம்பாந்தோடை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவரை பொலிஸார் கைது செய்வதற்கான அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊவா குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.