பிரதமர் ரணில் இந்தியா செல்லவுள்ளார்

319 0

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தற்போது நியுசிலாந்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், அதனை நிறைவுசெய்துக்கொண்டு எதிர்வரும் 4ஆம் திகதியன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

இதன்போது இலங்கை பிரதமர், இந்திய பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட பலரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியும் கோவாவில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகயுள்ளன.