தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டியதுடன் அதற்காக எமது உயிர்மூச்சுள்ளவரை நேர்மையாகவும், அர்பணிப்பாகவும் பணிப்போம் என்று ஆணிதரமாக வலியுறுத்துகிறோம் என தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் பொதுசெயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா கனராயன்குளத்தில் இன்று நடைபெற்ற குமார்பொன்னம்பலத்தின் நினைவுநிகழ்வில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே மேற்படிதெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்.
தமிழர்களிற்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் குமார் பொன்னம்பலமும் ஒருவர். செல்வந்த குடுப்பத்தை சேர்ந்த பிரபலமான சட்டதரணியான அவர் வசதிவாய்புக்கள் எவளவோ இருந்தும் கூட எமது மண்ணை உயிருக்குயிராக நேசித்து ஈழதமிழர்களிற்காக தன்னை அர்பணித்து உழைத்திருந்தார்.
தமிழ்மக்களின் உரிமைபோராட்டம் தமிழ்தேசத்தின் அங்கீகாரத்தை வேண்டி நகர்ந்த வேளையிலே அந்தபோராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, அதன் நியாயங்களை சர்வதேச அரங்கு வரை எடுத்து சென்று அதற்கு அங்கீகாரத்தை கொடுக்கவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு உலகின் பல நாடுகளிற்குபடி ஏறி சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும், இரயாய தந்திரிகளையும் தேடி சென்று சந்தித்து அக்காலப்பகுதியில் நடைபெற்ற இனபடு கொலைகள் ,இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் இலங்கை அரசின் பயங்கரவாத செயற்பாடுகளை சர்வதேசத்திற்கு தெரியபடுத்துவதில் மிகவும் பங்காற்றியவர்.
ராணுவத்தால் படுகொலைசெய்யபட்ட மாணவியான கிரிசாந்தி தொடர்பான தகவல்களை வெளிஉலகிற்கு கொண்டுசென்று செம்மணிபுதைகுழியை தோண்டி சந்திரிகா அம்மையார் சமாதான வேடம்போட்டு புரிந்த இனபடுகொலை சம்பவங்களையும் அவரது கொலைமுகத்தையும். சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியதிலே இவரது பங்கு அளப்பரியது.
அவரது ஐனநாயக வாதங்களை ஏற்றுக்கொள்ளாத சந்திரிகா அரசு அவரை படுகொலைசெய்தது.
அவரது தியாகத்திற்கு மதிப்பளித்து தேசியதலைவர் மாமனிதர் என்ற அதிஉயர் கௌரவத்தை வழங்கியிருந்தார். அவர் எந்த இலட்சியத்திற்காக உரியர்திறந்தாரோ அந்த அடிப்படையில் வடகிழக்கு இணைந்த தாயகத்திலே சுயநிர்ணய அடிப்படையிலே எங்களிற்கான அரசியல் தீர்வை பெறுவதற்காக தொடர்ந்து பயணிக்கவேண்டும்.
ஒற்றையாட்சியை நாம் நிராகரிக்க வேண்டும், ஏக்கியராட்சியை நாம் நிராகரிக்க வேண்டும். பௌத்தம் அரச மதம் என்பதை நாம் நிராகரிக்க வேண்டும்.எமது தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும் அதற்காக எமது உயிர் மூச்சுள்ளவரை நேர்மையாகவும் அர்பணிப்பாகவும் பணிப்போம் என்பதை இந்த இடத்திலே ஆணிதரமாக வலியுறுத்துகிறோம். என்றார்.