அமைச்சரவையின் அனுமதி இன்றியே வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியது முற்றிலும் தவறான விடயம் என ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னரே வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறிய கருத்து பொய்யான விடயம் என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்த விடயம் வர்த்தமானியில் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி வெளியிடப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.