புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படுவது குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.வரி அறவீடு தொடர்பான பிரச்சினையே மக்களுக்கு இருக்கும் பிரச்சினையாகும். ஆனால் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு விடுமா?. அதன் தலைவர் யார்? கட்சியின் பெயர் என்ன என்ற பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கும் வரி அறவிடப்படாது போனால், புதிய கட்சி ஒன்றின் தேவை இருக்காது. மக்கள் அனைத்து துறைகளிலும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மக்கள் தினமும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள், துன்பங்கள் காரணமாகவும் அவர்களுக்கு ஏற்படும் அநீதியை தடுக்கவும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும்.இதனால், அரசாங்கம் அஞ்ச வேண்டியது புதிய கட்சியை எண்ணியல்ல. மக்களை எண்ணியே அஞ்ச வேண்டும்.இரத்தினபுரியில் எதிர்வரும் 8 ஆம் திகதி கூட்டம் ஒன்று மாத்திரமே நடைபெறும் புதிய கட்சி எதுவும் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.