நாடு திரும்பும் இலங்கையர்களின் உதவி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

331 0

index-38அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடுதிரும்பும்போது வழங்கப்படும் நிதித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நவுறு மற்றும் மானுஸ் தீவுகளில் உள்ள அகதி முகாம்களில் நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இலங்கை அகதிகள் சுயவிருப்பத்தின்பேரில் நாடு திரும்பினால், இதுவரையில் வழங்கப்பட்டு வந்த 10 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் எதிர்காலத்தில் 20ஆயிரம் டொலர்களாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அடைக்கலம் கோரியுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.