பம்பலபிட்டி வர்த்தகர் கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

349 0

shakeelபம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மொஹமட் சுலைமான் கடந்த ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடபில் கைதான ஒன்பது சந்தேக நபர்களும் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதேநேரம் கைதானவர்களின் கைப்பேசிகள் மற்றும் வாகனம் என்பன தொடாபில் ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தின் ஊடாக தகவல் திரட்டுவதற்காகஇ மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கையை முன்வைக்குமாறு நீதிமன்றம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தியது.