சுதந்திர கட்சியின் செயலாளர் பதவி விலகல் – புதிய செயலாளர் தயாசிறி ஜயசேகர

253 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி புதிய செயலாளராக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே தயாசிறி ஜயசேகர கட்சியின் புதிய பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment