இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
‘சமுந்தரி ஜிஹாத்’ எனப்படும் இந்த தாக்குதல் மூலம் கடல் வழியாக புகுந்து முக்கிய துறைமுகங்களை தாக்க, பயங்கரவாத இயக்கங்கள் தனது குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.