பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க மறுப்பு!

292 0

பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது. 

அல்-அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 7 ஆண்டு சிறை என்பது கடுமையான தண்டனை என கருத்து தெரிவித்துள்ள நவாஸ் ஷெரீப், இந்த கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் என்கிற ரீதியில், தனது உத்தரவின் பேரில் பணிகளை செய்ய ஒரு உதவியாளரை வைத்து கொள்வது உள்பட சிறையில் சிறப்பான வசதிகளை பெற நவாஸ் ஷெரீப்புக்கு உரிமை உள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது. அவருடைய அறையை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது

Leave a comment