தேசிய பட்டியலில் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு துரோகமிழைத்து ஆளும்தரப்பினர் பக்கம் சென்றவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையினை பறிக்கும் கடுமையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு எவ்வித அமைச்சு பதவிகளும் கிடைக்கப் பெறவில்லை. மாறாக கட்சியின் முன்னிலை வகித்து வெறும் காட்சிப் பொருளாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றுள்ளது . இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்படுகின்றது. இம்முரண்பாடே பாரிய பிளவினை ஏற்படுத்தும் என்றார்.