ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை தடை செய்வதற்காக முஸ்லிம்,இந்து மத அலுவல்கள் அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கப்போவதாக புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை, உயர்தர பரீட்சை என்பவற்றிற்கு அறநெறி கற்கை மூலம் புள்ளிகள் வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் அதன்படி குறித்த பரீட்சைகளுக்கு 10 புள்ளிகள் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி வரையும் போயா தினங்களில் முழுமையாகவும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த குறித்த அமைச்சரவை பத்திரத்தில் யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது