கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவு பெற்ற 12 மாத காலப்பகுதிக்குள் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இரண்டு தசம் 6 மில்லியன் கொள்கலன்கள் ஏற்றி-இறக்கப்பட்டுள்ளன.
இது 13 சதவீத வளர்ச்சியாகும். 2017ம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் ஏற்றி-இறக்கல் செயற்பாட்டில் 38 சதவீதமாகும். இதன்படி துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடு கடந்த வருடம் 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளது