இடைக்கால வரவு, செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுத் சட்டமூலம் விரைவில்

265 0

நாட்டின் நிதி நிர்வாகத்தை சீராக முன்னெடுக்கும் நோக்கில் மத்தியகால அரசநிதி இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதகாலத்திற்கான இடைக்கால வரவு, செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு உள்ளடங்கலாக இவ்வருடத்திற்கான ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலத்தினை தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய முன்மொழிவுகள் அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டமையைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்கான முழுமையான வரவு, செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வரவு, செலவுத் திட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரச நிதி ஒருங்கிணைப்பு வேலைத்திட்டத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், 2021ஆம் ஆண்டில் அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள மத்தியகால அரசநிதி இலக்குகளான அரச வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியில் 17 சதவீதத்தை விடவும் அதிகரித்தல், அரசாங்கத்தின் மீண்டு வரும் செலவை மொத்த தேசிய உற்பத்தியில் 15 சதவீதமாக மட்டுப்படுத்தல், அரசாங்கத்தின் முதலீட்டை மொத்த தேசிய உற்பத்தியில் 5.5 சதவீதமாக தொடர்தல், வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை மொத்த தேசிய உற்பத்தியில் 3.5 சதவீதமாக வரையறுத்தல், திருப்பிச் செலுத்தப்படாத அரச கடனை மொத்த தேசிய உற்பத்தியில் 70 சதவீதத்தை விடக் குறைவாகப் பேணல் ஆகியவற்றை சாத்தியப்படுத்தும் வகையிலுமான காரணிகள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதாவது,

Leave a comment