கொழும்பில் இலகு ரயில் கட்டமைப்பு உருவாக்கம்

251 0

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகன நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு நகரத்துக்குள் இலகு ரயில் கட்டமைப்பொன்றை அமைப்பதற்காக ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது.

இந்த இலகு ரயில் இடப்பெயர்வு கட்டமைப்பின் மூலம் நிர்வாக கேந்திர நிலையம் வணிக மத்திய நிலையம் மற்றும் கொழும்பை அண்டியுள்ள அதிக மக்கள் தொகையுடன் கூடிய தங்குமிட பிரதேசங்களை ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தும் வகையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று இந்த இலகு ரயில் இடம்பெயர்வு கட்டமைப்பு நெடுஞ்சாலை வலைப்பின்னலுடனும், மாதிரி போக்குவரத்து நிலையத்துக்கும் இலகுவான முறையில் பிரவேசிக்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

இந்ததிட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை மாதிரி போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து மாலபே டிப்போ வரையில் 16 ரயில் நிலையங்களுடன் 17கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இலகு ரயில் பாதைக் கட்டமைப்பொன்று 246 641 மில்லியன் ஜப்பானிய யென் முதலீட்டுடன் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிதியை ஒதுக்கீடு செய்யும் நோக்கில் 200 415 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்குவதற்கு ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனம் உடன்பட்டுள்ளது. 

இதற்கான கடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் கடன் உடன்படிக்கையை எட்டுவதற்கும் நிதி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடடத்தக்கது.

Leave a comment