மங்கள சமரவீர – ரவிகருணாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

270 0

வெளிநாட்டு கடனை அடைப்பதற்காக அரசவங்கியிடமிருந்து பணம்பெறும்  நிதியமைச்சர் மங்களசமரவீரவின் யோசனைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அமைச்சரவையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன்  அமெரிக்க டொலர்களை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை மங்களசமரவீர சமர்ப்பித்ததை தொடர்ந்தே இந்த வாக்குவாதம்  இடம்பெற்றுள்ளது

அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் மங்களசமரவீர இது குறித்து பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்

எனினும் வெளிநாட்டு கடன்களை அடைப்பதற்காக சாதாரண மக்களை ஆபத்துக்குள்ளாக்க கூடாது என தெரிவித்துள்ள அமைச்சர் ரவிகருணாநாயக்க இந்த அமைச்சரவை பத்திரத்தை எதிர்த்துள்ளார்

வெளிநாட்டு கடன்களை அடைப்பதற்காக மாற்று வழிகளை ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மங்களசமரவீர ரவிகருணாநாயக்கவிற்கும்  இடையில் முறுகல்நிலையேற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த வாக்குவாதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a comment