பாரிய கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டத்தை குழப்ப முயற்சி !

210 0

பாரிய கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சியுடன் டீல் போட்டுக்கொண்டிருப்பவர்கள் குழப்ப முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் யார் எதிர்த்தாலும் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இந்த மாதத்துக்குள் உறுத்திப்படுத்துவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

முன்னணியில் யாருக்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கப்படவேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சிக்கு தீர்மானிக்க முடியாது. 

சம்பந்தன்போன்ற ஒருவரை நியமிக்க ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கலாம். அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். அத்துடன் முன்னணிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. 

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவதுதான் அனைவருக்கும் பிரச்சினையாக இருக்கின்றது.

அதனால் மஹிந்த ராஜபக்ஷவே  பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பதை எப்படியாவது இந்த மாதத்துக்குள் உறுதிப்படுத்துவோம். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தை நீதிமன்றம் தீர்க்கமுடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அதுதொடர்பில் தீர்மானிக்கவேண்டும் என்றார்.

Leave a comment