முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் ஆரம்பிக்கும் கட்சியில் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷவுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதால், மகிந்தானந்த தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்.
இதன்காரணமாக பஷல் – மகிந்தானந்தவுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை தற்போது உக்கிரமடைந்துள்ளதாக மகிந்த தரப்பு உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மகிந்தவின் பஷில் சார்பு அணியினர் புதிய கட்சியில் மகிந்தானந்தவை ஓரங்கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மனம் நொந்துள்ள மகிந்தானந்த மைத்திரிபக்கம் தாவுவதற்காக காய்களை நகர்த்துவதாக அறியக் கிடைத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அவர் மைத்திரிபக்கம் முழுமையாக தன்னை இணைத்துக்கொள்வார் என அறியக் கிடைத்துள்ளது.
இதனாலேயே அவர் கோப் குழுவுக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன், மகிந்த அணியில் உள்ள டியூ.குணசேகர உட்பட சிலர் மகிந்தவை பங்கிரங்கமாக விமர்சித்து வருவதும் தெரியவந்துள்ளது.