கேப்பாபுலவு மக்கள் சம்மந்தனுக்கு கடிதம்!

249 0

கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ் நிலங்களை இராவத்தினர் அபகரித்து இருப்பதைக் கோரி விடுவிக்ககோரி 670 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 

நாம் இன்று நேற்றல்ல 2009 ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது நாங்கள் எமது சொத்துக்களை இழந்து நிர்கதியான நிலையில் எமது சொந்த ஊரை விட்டு இடம்பெயார்ந்த நாம் பின்னர் கேப்பாபுலவு மாதிக் கிராமத்தில் நாங்கள் மீள்குடியேற்றப்பட்டோம். 

அரசினால் ஜனநாயக வழியில் மீள் குடியமர்த்தப்படுவோம் என எமது கிராம சேவையாளர் பிவுக்குள்ளேயே 10 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தோம். எம் பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும் என பல வடிவங்களில் உரிமைக் குரல் கொடுத்தோம். அரசு பாரா முகமாக இருக்க எமது வாழ்விடத்தை நாமே பெற்றெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். 

2017.03.01 அன்று ´´எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும்´´ என அகிம்சை வழிபோராட்டத்தை தொடர்ந்துள்ளோம். தொடரும் எமது போராட்டத்தின் நிஜாயத்தை ஏற்று ஜனநாயக அரசு ஆனால் நல்லாட்சி அரசாங்கம் எமது போராட்த்திற்கான முழுமையான நிரந்தரமான தீர்க்கமான தீர்வை இதுவரை பெற்றுத்தரவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகின்றது.

நாம் அரசிற்கோ, இராணுவத்தினருக்கோ, தேசிய நல்லிணக்க சமாதானதிற்கோ எதிரானவர்கள் அல்ல. எமது வாழ்விடத்தில் மீள்குடியேறி, நிம்மதியாக சுதந்திரமாக எங்களால் வாழ முடியவில்லை என்பதால் இந்த போராட்ட நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம் என்பது தாங்களும் சர்வதேசமும் அறிந்த உண்மையே. போர்க் காலத்தில் இடம்பெயர்ந்த 138 குடும்பங்களின் 282 ஏக்கர் வாழ்விடக் காணிகளுடன் 8 நபர்களின் 25 ஏக்கர் திட்ட மத்திய வகுப்பு காணிகள் 200 ஏக்கர் உள்ளடக்கலாக மொத்தம் 482 ஏக்கர் காணி விடுபடும் வரை எமது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடமாட்டோம் என்ற மன உறுதியுடனும் காணி அத்தாட்சி பத்திர உறுதியுடனும் போராட்டத்தைத் தொடர்ந்தோம் என்பது உலகரிந்த உண்மையாகும். 

இவ்வாறு எமது போராட்டத்தின் கோரிக்கைகளை மாண்புமிகு ஜனதிபதிக்கு நீங்கள் எடுத்துரைத்து கூரியதற்கு அமைய 303 நாட்களுக்கு பின்னர் 104 குடும்பங்களின் 171 ஏக்கர் காணியும் மக்களின் பொது அமைவிடங்களான பாடசாலை, பொ.நோ.மண்டபம், சனசமுக நிலையம், முன்பள்ளி, பொதுக் கிணறு, ப.நோ.சங்கம், பொது விளையாட்டு மைதானம், இந்து கிறிஸ்தவ மயானங்கள், கிறிஸ்தவ ஆலயம் போன்ற இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்க 65 நபர்களுக்கு சொந்தமான 111ஏக்கர்காணிகள் வழங்கப்பட்டு 38 குடும்பங்கள் மீள் குடிமயர்த்தப்பட்டமைக்கு எமக்கு இதய மகிழ்வான நன்றிகள். 

எனினும் 71 ஏக்கர் மக்கள் வாழ்விட காணிகள் 25 ஏக்கர் திட்ட பெருந்தோட்ட காணி 100 ஏக்கர் காணிகள் உள்ளடங்களாக (காணி அத்தாட்சிப் பத்திரமுடைய) 104 குடும்பங்களின் 171 காணிகள் 670 நாட்களாக கொட்டும் மழை, பனியிலும் நுளம்புத் தொல்லையுடன் குழந்தை குட்டிகளுடன் எதிர்கால மழலைகளின் கல்வி, கலாசாரம் பண்பாடு சீரழியும் நிலையில் நாற் சந்தி தெருவோரத்தில் நாயாகக் கிடக்கும் எமது வாழ்விடத்துக்கு ஒரு தீர்வ இல்லை. என்பதை நாங்கள் சுட்டிக்காட்டி இன்று 671 ஆவது நாளாக அதாவது 22 மாதங்களும் 5 நாட்களிலும் எமது போராட்டம் தொடர்கின்றது. 

இந்த நிலையில் மாண்புமிகு ஜனாதிபதி டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இடையில் சகல மக்களின் காணிகளும் கையளிப்பேன் என வாக்குறுதியளித்த போதும் கேப்பாபுலவு மக்களின் காணிகள் தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிவித்ததாக நாங்கள் செய்தி ஊடகங்ஙள் வாயிலாக அறிந்துள்ளோம். 

நாமும் எம்வாழ்விடத்தில் மீள் குடியமர்த்தப்படுவோம் என்ற ஆதங்கத்துடன் எதிர் பார்த்திருந்தோம். ஆனால் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் மாண்புமிகு ஜனாதிபதி விட்ட அறை கூவலுக்கமைவாக காணிகள் விடுவிப்பு பட்டியலில்எம் வாழ்விடம் அமையவில்லை என்பதை அரசதிபர் மூலம் அறிந்து சொல்லணா துன்ப கவலையில் மூழ்கியுள்ளோம். 

672 நாட்களாக போராடிய நாம் இனியும் காலம் தாழ்த்தவோ பொறுத்து போராடக்கூடிய நிலையிலோ நாம் இல்லை. என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருவதுடன் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இடையில் ஜனாதிபதி எமது மக்கள் வாழ்விடக் காணியைக் கட்டங்கட்டமாகவல்ல முழுமையாக கையளிக்கா விட்டால் அடுத்துவரும் நாட்களில் எமது பூர்வீக நிலங்களில் எமது சொந்த விருப்பத்துடன் மீள்குயேரவுள்ளோம். 

எமது பூர்வீக நிலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதனால் மக்களாகி எமக்கும் இராணுவத்தினரால் இடையூறு முரண்பாடுகள் ஏற்பட்டால் நாட்டின் தலைவரும் முப்படைகளின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக்குரியவரார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மிகுந்த மன வேதனையுடன் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 

Leave a comment