தீ விபத்தில் பாதிக்கபட்ட குடியிருப்பாளர்களுக்கு தனி வீட்டுத்திட்டம்

228 0

ஹட்டன் டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுக்கும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கபடும் எனவும் அதற்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யபட்டுள்ளதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

எனது பணிப்புரைக்கு அமைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபையின் உருப்பினர் பாலகிருஷ்னண் சிவநேசன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் ஆகியோர் பாதிக்கபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதன் பிறகே உடனடியாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பொருட்டு எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

குறித்த போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் சனிக்கிழமை காலை 06.15 மணி அளவில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் சுமார் 24 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கபட்டுள்ளமை தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரபட்டது. இவர்களுக்கான நிவாரண பொருட்கள் என்பன வழங்கு நடவடிக்கையினை அம்பகமுவ பிரதேச செயலாளர் ஊடாகவும் வழங்கபட்டு வருவோதோடு குறித்த தோட்ட பகுதியில் பாதிக்கபட்ட மக்களுக்கு தற்காலிகமாக போடைஸ் தோட்ட விளையாட்டு மைதனத்தில் கூடாரங்கள் அமைப்பதற்கு 5 இலட்சம் ரூபா செலவில் தகரங்கள் வழங்கபட்டுள்ளன எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, தற்காலி கூடாரங்கள் அமைக்கும் பணிக்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதோடு குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என தோட்ட முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

அதுமட்டும் அல்லாது இந்த தீ விபத்தினால் மக்களுடைய உடமைகள் மற்றும் அடையாள அட்டை பிறப்பு சான்றுதல், பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர்கள் என பல பொருடகள் எரிந்து சாம்பளாகியுள்ளதாகவும் நான் அறிந்தேன். இவை அனைத்தையும் பெற்று கொடுப்பதற்கு இந்த பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

Leave a comment