அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28.11.2018 அன்றிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அ.தி.மு.க. அரசு கண்டும் காணாமலும் இருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.