தர்மன் சண்முகரத்தினம் பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்

381 0

download-65சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன்.

அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் பதவியை ஏற்க எனக்கு தகுதியில்லை எனக் கருதுகிறேன்.

எனவே, அரசாங்கமானது நாட்டின் வலுவான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, நீண்டகால அடிப்படையில் சிந்தித்து சிறந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னம் வர வேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.