இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணை உரியமுறையில் இடம்பெற்று வருவதை வரவேற்பதாக சிபிஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர் குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதியன்று லசந்த விக்ரமதுங்க இரத்மலானை அத்திட்டியவில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இதன்பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் கொலை தொடர்பான விசாரணைகள்நடத்தப்பட்டபோதும் எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
எனினும் தேசிய அரசாங்கத்தின் கீழ் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகள் துரிதகதியில் இடம்பெற்று கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து லசந்தவின் கொலைக்கு துப்பாக்கியா? அல்லது அதற்கு முன் கூரிய ஆயுதம்பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நேற்று முன்தினம்அவரது சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
இதனை வரவேற்றுள்ள சர்வதேச ஊடகக்குழு, விசாரணைகள் நேர்மையாக இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த குழு கோரியுள்ளது.