வன்னி மண் இரத்த வெள்ளத்தால் மட்டுமல்ல மழை வெள்ளத்தாலும் அழுதது!

922 0

கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எவரிடமும் இருந்திருக்கவில்லை. 21 ஆம் திகதி இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. பாரியளவிலான நீர்ப்பாசன குளங்கள் முதல் சிறிய நீர்ப்பாசன குளங்கள் வரை வழமைக்கு மாறாக நிரம்பி வழிந்தது.

ஊருக்குள் காணப்பட்ட வாய்க்கால்கள், கால்வாய்கள் என அனைத்தும் அதன் கொள்ளளவையும் தாண்டி வெள்ள நீரால் நிரம்பி ஓடியது. பள்ளமான வீதிகள் ஆறுகள் போன்று காட்சியளித்தது. இதன் விளைவு கிளிநொச்சி மாவட்டத்தில் 60 கிராமங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியது.

வெள்ளத்திற்குள் மக்கள்

அதிகரித்த மழையும் தொடர்ச்சியாக பெய்துகொண்டிருக்க, குளங்களும் வான் பாய்ந்த அதே நேரம் வாய்க்கால்கள், கால்வாய்கால் என அனைத்தும் வெள்ளம் நிரம்பி ஊருக்குள் சென்று கிராமங்கள் குளங்கள் போன்று காட்சியளித்தது. வீடுகளுக்கு வெள்ளம் அதிகாலை வெள்ள நீர் வீட்டுக்குள் சென்றே பலரை எழுப்பியுள்ளது. கிணறுகள், மலசல கூடங்கள் என வெள்ள நீர் கோழிக் கூடுகள் ஆட்டு மாட்டுக்கொட்டில்கள் என வெள்ளம் எதனையும் விட்டுவைக்கவில்லை. குறுகிய நேரத்தில் பார்க்கின்ற இடமெல்லாம் வெள்ளக் காடாக மாறிக்கொண்டிருக்க மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர் இந்த நிலையில் அனர்த்தம் தொடர்பான தகவல் வேகமாக பரவத் தொடங்கியது. இதனையடுத்து திணைக்களங்கள் செயற்பட தயாராக முன் முப்படையினர் களத்தில் இறங்கினார்கள் வெள்ளத்திற்குள் காணப்பட்ட மக்களை அவர்கள் பாதுகாப்பாக மீட்க தொடங்கினார்கள். மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக அங்கங்கு அருகில் இருந்த பாடசாலை, பொது நோக்கு மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்

இதேவேளை கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் இரண்டு வான்கதவுகளை தவிர அனைத்து வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டும் மூன்றடிக்கு வான் பாய்ந்தது. குளத்திலிருந்து வெளியேறுகின்ற நீரை விட உள் வருகின்ற நீர் அதிகமாக இருந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. அத்தோடு இரணைமடுகுளத்திற்கு நீர் வருகின்ற பிரதேசங்களில் 365 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி இருந்தது. குறிப்பாக மாங்குளம், கனக்கராயன்குளம் பிரதேசங்களில் இந்த அதிகரித்த மழை வீழ்ச்சி காணப்பட்டமையால் குளத்திற்கான நீர் வரவு வெகுவாக அதிகாரித்துக்கொண்டிருந்தது. இதனால் குளத்து நீர் வெளியேறுகின்ற தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு வழமையைவிட அதிகமாக இருந்தது. இதனை தவிர கிளிநொச்சியில் அக்கராயன்,புதுமுறிப்பு, கல்மடு, கனகாம்பிகை, பிரமந்தனாறு போன்ற குளங்களும் முல்லைத்தீவில் முத்தையன்கட்டு,வவுனிக்குளம், உடையார்கட்டு, போன்ற குளங்களும் வழமைக்கு மாறாக வான்பாய்ந்தமையால் அதிகரித்த வெள்ளம் ஏற்பட்டது.

இதன் விளைவே இந்த இரு மாவட்டங்களிலும் வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படலாயிற்று. கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 25 ஆம் திகதி கணிப்பிடப்பட்ட மாவட்டச்செயலக தகவல்களுக்கு அமைய 12597 குடும்பங்களைச் சேர்ந்த 41317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரைச்சிஇ கண்டாவளைஇ பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் இப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5885 போ் 19 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3142 குடும்பங்களைச் சேர்ந்த 10339 பேரும்இ கண்டாவளையில் 7635 குடும்பங்களைச் சேர்ந்த 24820 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1819 குடும்பங்களைச் சேர்ந்த 6156 பேரும் பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 23 வீடுகள் முழுமையாகவும்இ 314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது எனவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று முல்லைத்தீவ மாவட்டத்தில் கடந்த 24 திகதிய கணிப்பின் படி ஐந்து பிரதேச செயலக பிரிவுகளில் 77 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 ஆம் திகதிய முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கணக்கெடுப்பின் படி 6520 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 28 நலன்புரி நிலையங்கள் காணப்படுகின்றன என்றும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதி யுத்தத்தின் அதிக பாதிப்புக்களை சந்தித்த இந்த இரு மாவட்டங்களில் மீள்குடியேற்ற பணிகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை இதனால் கணிசமான குடும்பங்கள் தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் வசித்து வந்தனர். எனவே வெள்ள நீர் வீடுகளுக்குள் ஒரு அடி இரண்டு அடிக்கு மேல் சென்றமையால் அவர்கள் வீடுகளில் வசிக்க முடியாது நிலை தற்போதும் தொடர்கிறது.

வெள்ளப் சில பிரதேசங்களில் ஒரு நாள் முழுவதும் சூழ்ந்திருந்த்து ஆனால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ள காணப்பட்டது. அதேவேளை இந்த நாட்களில் மீண்டும் அவ்வ்வ் போது பெய்த கடும் மழை காரணமாக தாக்கம் குறைந்து போகாது தொடர்கிறது.

அழிந்துபோன வாழ்வாதாரம்

ஒரு இரவுக்குள் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பலரது வாழ்வாதாரம் முற்றாக அழிந்து போனதோடு மேலும் பலரது வாழ்வாதாரம் பாதிப்படைந்தும் காணப்படுகிறது. ஆடுகள் மாடுகள் கோழிகள் என வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டு ஆங்காங்கே இறந்தும் காணப்பட்டது. வியாபார நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்சென்றமையாலும் தொழில் ரீதியாக பலர்மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அத்தோடு முக்கியமாக பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன.

போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்றும் பல கிலோ மீற்றர் வுPதிகள் புனரமைக்கப்படாத வீதிகளாக காணப்படுகின்றன. அத்தோடு நிரந்தரமாக புனரமைக்கப்பட்ட வீதிகளும் உண்டு வெள்ளம் காரணமாக புனரமைக்கப்படாத பல வீதிகளை முற்றாக சேதமாக்கியுள்ளது. அத்Nதோடு புனரமைக்கப்பட்ட பல வீதிகள் முற்றாகவும் பகுதிளவிலும் சேதமடைந்துள்ளன. பாலங்கள் உடைந்தும் வெடித்தும் ஆங்காங்கே காணப்படுகிறது. இது தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்கள் இதுவரை உரிய திணைக்களங்களால் திரட்டப்படவில்லை திரட்டும் பணி இடம்பெற்று வருவதாக குறிப்பிடுகின்றனர். சில கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. சில பாதைகளுக்கு ஊடான போக்குவரத்தும் துண்டிக்கபட்டிருந்தன. ஆனால் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

வெள்ள நீர் உட்சென்ற குடும்பங்களில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சிலரது பாவிக்க முடியாது அளவுக்கு நனைத்து சேதமடைந்துள்ளன. இதனை தவிர மாணவர்களின் சீருடைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு தற்போது பல பாடசாலைகள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களாகவும் காணப்படுகிறது.

சுகாதார நெருக்கடி

வெள்ள நீர் கிராமங்களை மூடி பாய்ந்தமையால் கிணறுகள், மலசல கூடங்கள், சாக்கடைகள் என அனைத்தையும் மூடி பாய்ந்திருக்கிறது. இதனால் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வது முதல் மலசல கூட தேவைகளை பூர்த்தி செய்வது வரை மக்கள் இடர்களை சந்தித்து வருகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் மக்கள் தற்போது மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினர்களுது பல்வேறு உதவிகளும் கிடைத்து வருகின்றன. ஆனால் எவையும் திட்டமிட்டப்பட்டு வழங்கப்படுவதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு வழமைக்கு திரும்பினால் பாதிக்கப்பட்ட மக்களும் வழமைக்கு திரும்புவார்கள் ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு தாங்கள் வீடுகளுக்குச் சென்று அங்கு வசிப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே. வெள்ளம் உட்ச்சென்ற வீடுகள், முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமுற்ற வீடுகள், குடிநீர், சுகாதாரம் போக்குவரத்து, போன்ற பாதிக்கப்பட்ட விடயங்களில் அரசு தீர்வுகளை காண்கின்றபோது விரைவான வழமைக்கு திரும்பும் செயற்பாடுகள் சாத்தயமாகும்.

மு.தமிழ்ச்செல்வன்

Leave a comment