மைத்திரிபால சிறிசேன பணிப்புரையின் பேரில் அனுராதபுரம் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட 250 இலட்ச ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டாகும் போது வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக ஜனாதிபதியின் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கத்தில் ஆசிரிகம கிராமமும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கிராமசக்தி வடமத்திய மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கு பற்றியதன் பின்னர் ஜனாதிபதி கடந்த 20 ஆம் திகதி ஆசிரிகம கிராமசக்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு புதிய வீடுகள், விவசாயத்திற்கான முறையான நீர் வழங்கல் மற்றும் முன்பள்ளி பாடசாலை கட்டிடங்கள் தொடர்பில் கிராமவாசிகள் ஜனாதிபதியின் கோரிக்கைகளை முன்வைத்தனர். கிராமவாசிகளின் கோரிக்கைகளுக்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதியினால் 250 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அங்கு பழுதடைந்திருந்த இரண்டு முன்பள்ளி பாடசாலை கட்டிடங்களை புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.