ரஞ்சித் சொய்சா பிணையில் விடுதலை

302 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (28) காலை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16ம் திகதி கொடகவெல பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் செய்சா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி கடந்த 20 ஆம் திகதி காலை கொடகவெல பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை ஜனவரி மாதம் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment