புத்தர் சிலை உடைப்பு நிகழ்வுகளின் பின்னால் அரசியல் சதி முயற்சி இருக்கின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தோல்வியை மூடிமறைக்க அம்பாறையிலும், கண்டியிலும் சிங்கள – முஸ்லிம் இனப் பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தமையை பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.
கடந்த அரசியல் நெருக்கடி நிலைமையின் பின்னர் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கான ஒரு முயற்சியா இந்த புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இன்று தேவைப்படுவது சிங்கள – முஸ்லிம் கலவரமொன்றாகும் எனத் தெரிவித்த விமல் வீரவங்ச எம்.பி, இதனால் எச்சந்தர்ப்பத்திலும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் என இந்நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.