வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சில அரசியல்வாதிகள் இனங்களுக்கு மத்தியில் இனவாதத்தை பரப்பி அதனூடாக அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.
மேல் மாகாண ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
யுத்த காலத்திலும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் எமது நாட்டு பிரஜைகள் சிலர் தற்காலிகமாக வெளிநாடுகளில் அடைக்களம் பெற்றுச்சென்றனர். யுத்தம் நிறைவடைந்து அமைதியான சூழல் ஏற்பற்ற பின்னர் அவர்களை அந்த நாடுகள் மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இதனை மேற்கொண்டு வருகின்றன.
என்றாலும் இந்த நிலையை மாற்றியமைத்து தஞ்சம் புகுந்தவர்களுக்கு அந்த நாடுகளில் நிரந்தர பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர்ந்து வாழும் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.