மாவனெல்லை சம்பவத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாட்டில் இனவாத்தை தூண்டி அமைதி நிலையை சீர்குழைப்பதற்காகவே இந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகளை உடைத்து சேதமாக்கியதை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டில் அமைதியான சூழ்நிலையை பெற்றுக்கொடுத்து நீதிதுறை உள்ளிட்ட முத்துறைகளையும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சாதகமான நிலை நாட்டில் உருவாக்கிகொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலயைில் சமூக வலைத்தளங்களினூடான என் மீது முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கப்படுமானால் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வேன்.
அத்துடன் திட்டமிட்டு செய்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாமல், சேறு பூசும் வகையில் சமூகத்தில் பொய் பிரச்சாரங்களை செய்துவருவர்களை கண்டிறிந்து அவர்களுக்கான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.