எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர த.தே.கூட்டமைப்புக்கு எந்த தார்மிக உரிமையுமில்லை-எஸ்.பி

237 0

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அதனால் உடனடியாக தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவோம். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாகும். எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு அவர்களுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

சுமந்திரன் எம்.பியின் நடவடிக்கைகள் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ் சிங்கள மக்களின் ஆதரவை பெற்றவர். அதனால் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிராக சுமந்திரன் எம்.பி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிங்கள மக்களை ஆத்திரமூட்டக்கூடியதாகவே இருக்கின்றது என்றார்.

Leave a comment