பட்ஜெட் விலையில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ!

4308 0

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் ஃபீச்சர் போன்களில் இருந்து முதல்முறையாக 4ஜி சாதனத்திற்கு மாற விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

முதல் முறையாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற வகையில், பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் திறன் கொண்ட நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் குறைந்த விலையில் சிறப்பான கனெக்டிவிட்டி மற்றும் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை பயனர்கள் அனுபவிக்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஃபிளெக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இருநிறுவனங்களும் இணைந்து சுமார் பத்து கோடி ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


அதிகளவு மொபைல் போன்களை உற்பத்தி செய்வதால், அரசாங்கத்திடம் வரிச் சலுகையை கோர ஃபிளெக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 இரண்டாவது காலாண்டு வரை ரிலையன்ஸ் ஜியோ இந்திய ஃபீச்சர் போன் சந்தையில் 47 சதவிகித பங்குகளை பெற்றிருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சி நிலையை பதிவு செய்யலாம். கவர்ச்சிகர சலுகைகள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபல செயலிகளின் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது போன்றவை ஜியோபோன் விற்பனையை அதிகப்படுத்த முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

Leave a comment