த.தே.கூவின் கோரிக்கைகளை நிறைவேற்றி வை்ப்போம்-

1519 0

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உடன்படிக்கைகள் எதுவும் செய்துகொள்ளாவிட்டாலும் அவர்களது நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்போம் என்று முஸ்லிம் சமய விவகார தபால்துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார். 

அவர் புதிதாக அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்றபின் மல்வத்தை மாகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள சித்தார்த்த தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஞானரத்ன தேரர் ஆகியோர்களை சந்தித்து நல்லுபதேசம் பெற்ற பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வாரத்ததைகள் நடத்தினாலும் எந்தவித உடன்படிக்கைக்கும் முற்படவில்லை என்றும் கூறினார். 

வடபகுதியில் காணி விடுவிப்பு,அரசியல் சிறைக் கைதிகள் விடுதலை விவகாரம் போன்ற விடயங்கள் பற்றிப் பேசப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களது திட்டப்படி சகல அரசியல் கட்சிகளையும் இணைத்து

பரந்தளவு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி தேர்தலுக்கு செல்வதே நோக்கமாக உள்ளது. இதில் ஸ்ரீ லங்கா

சுதந்திரக்கட்சியும் கூட இணைத்துக்கொள்ளப்படலாம். ஆனால் தற்போதைய சட்ட சிக்கள்கள் சில அதற்குத் தடையாக உள்ளன. அதற்காக சட்ட உதவிகளை பிரதமர் நாடி உள்ளார். அப்படியாயின் தேசிய அரசாக இதனை மேலும் முன் எடுக்க முடியும்.

தற்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக 30 பேரை மட்டுமே நியமிக்க முடியும்.

தேசிய அரசானால் 45 வரை உயர்த்த முடியும். ஆனால் அதற்கு பாராளு மன்ற அனுமதி தேவை. வடக்கு,கிழக்கு பகுதிகளில் யுத்த காலத்தில் அதிகளவு தபால் நிலையங்கள் சேதமடைந்தன. அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 

தபால் சேவை என்பது இலாபம் ரூடவ்ட்டும் ஒரு துறையல்ல. ஆனால்

தனியார் துறையுடன் போட்டியிடும் வகையில் அதனை சீரமைக்க வேண்டி உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு உற்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் ஐ.தே.க. என்ற வகையில் எம்மை எவ்வாறு சீரமைத்துக்கொள்வது என்ற ஒரு அரிய பாடத்தை கற்றுக்கொள்ள முடிந்தது. 

கட்சியின் சில தொழிற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

 எனவே எதிர்காலத்தில் பல்வேறு சலுகைகளையும் சகாயங்களையும் வழங்குவதற்கு முயற்சித்துள்ளோம் என்றார்.

Leave a comment