வெலிஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எஹெட்டுகஸ்வௌ பிரதேசத்திற்கு அருகாமையில் 2 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்திலிருந்து முல்லைத்தீவினூடாக சென்ற மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பொலிஸாரால் சோதனையிடப்பட்ட போதே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கிலோ கிராம் 100 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த மோட்டார்சைக்கிளும் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வெலிஓயா பொலிஸார் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.