நாளை (26) நள்ளிரவு முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு சிக்கல்கள் அடிப்படையாக வைத்து இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.
புகையிரத எஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பாதிகாரிகள் என பலர் இந்த போரட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.